சேதமான குழிவயல் சாலை வாகனங்களை இயக்க சிரமம்
பந்தலுார்; சேரம்பாடி சப்பன்தோடு பகுதியில் இருந்து குழிவயல் பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக பழங்குடியின மற்றும் இதர சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், குப்பை கொண்டு செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலை முழுவதும் குழிகளாக மாறி வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை சேதமடைந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லாததால், இப்பகுதி மக்கள் வனவிலங்கு அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் வந்து செல்ல எதுவாக சாலையை சீரமைத்து தர வேண்டும்.