சேதமான சாலை
பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பிதர்காடு பஜார் முதல் ஆனப்பன்சோலை செல்லும் சாலையில் மேட்டுப்பாங்கான பகுதி சேதமடைந்து காணப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, எம்.எல்.ஏ., நிதியில், 5- லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 200 மீட்டர் நீள சிமென்ட் சாலையாக சீரமைக்கப்பட்டது. தரமின்றி அமைக்கப்பட்ட சாலை, சில மாதங்களிலேயே சேதமடைந்து குழிகளாக மாறி உள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.