உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த கழிவு நீர் கால்வாய் இணைப்பு சாலை பாதிக்கும் அபாயம்

சேதமடைந்த கழிவு நீர் கால்வாய் இணைப்பு சாலை பாதிக்கும் அபாயம்

கூடலுார்,; கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சேதமடைந்து வரும் கழிவுநீர் கால்வாயால் சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ரவுண்டான பகுதியிலிருந்து, பிரிந்து செல்லும் இணைப்பு சாலை, ஏழுமுறம் சாலையில் இணைக்கிறது. சாலை ஓரம் பஸ் ஸ்டாண்ட் தடுப்பை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இக்கால்வாயில் கழிவுநீருடன், மழை காலங்களில் மழை நீரும் செல்கிறது. பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்தின் போது, கழிவுநீர் கால்வாய் சேதமடைந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை. தற்போது, பெய்து வரும் மழையில், கழிவுநீருடன் மழை நீரும் செல்வதால், கால்வாயில் தொடர்ந்து மண்ணரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை, நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை