உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டேன் டீ தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

டேன் டீ தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

கோத்தகிரி: டேன் டீ தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடம் நடத்த முடிவு செய்துள்ளனர். டேன் டீ சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு. வெற்றிவேல், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் படி,1964ல் தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டேன் டீ) துவக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ், ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிட்டு, தின ஊதியமாக, 700 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், 15 நாட்களுக்கு முன்னதாகவே, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். முந்தைய அரசு அறிவித்தபடி, பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளிகளுக்கு, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் தனி வீடுகள் கட்டித் தர வேண்டும். வனத்துறையின் கீழ் இயங்கி வரும் வனத்தோட்ட கழகம், ரப்பர் தோட்ட கழகம் மற்றும் தேயிலை தோட்டக் கழகங்களை ஒன்றிணைக்க வேண்டும். தோட்ட கழகம் செய்துள்ள நில குத்தகை ஒப்பந்தம் ஆக.,மாதம் முடிவடைந்ததால், குத்தகை காலத்தை நீடிக்க வேண்டும். இம்மாதம், 22ம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில், 23ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன், குன்னுார் டேன் டீ தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை