சப்ளை டிப்போ சாலையில் சாய்ந்த மரத்தால் ஆபத்து
குன்னுார் : குன்னுார் வெலிங்டன், 'சப்ளைடிப்போ' சாலையில் சாய்ந்த மரம் வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது.குன்னுார் அருகே வெலிங்டன் சப்ளை டிப்போ சாலையில் நாள்தோறும் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் நடை பயணம் செய்கின்றனர்.இவ்வழியாக ராணுவ வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் செல்கிறது. மழையின் காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்பவர்கள்; வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் உள்ள 'டிரான்ஸ்பார்மர்' மீது விழுந்தால் மின் கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். எனவே, கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.