உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  திரு கல்யாண உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு

 திரு கல்யாண உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு

கூடலுார்: மசினகுடி ஸ்ரீ ஈசான்ய லிங்கேஸ்வரர் கோவில், சிவகுடும்ப திருக்கல்யாண விழா நடந்தது. விழாவில், திருவிளக்கு பூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், பஞ்சகவ்யம் வாஸ்து பூஜை, மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பூர்வாங்க பூஜை சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின், சுவாமிக்கு திருகல்யாண பூஜை, தேவதா ரக்ஷபந்தன், மாங்கல்யா தாரணம், மாலை மாற்றுதல் மஹாதிபராதனை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை