மேலும் செய்திகள்
விழுப்புரம் பஸ் நிலையம் வெறிச்சோடியது
01-Nov-2024
கூடலுார் ; கூடலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தொடரும் துாசு படலத்தால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. கடந்த பிப்., 25ம் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், பருவமழை காலத்தில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மழை நீர் தேங்கி சேறும், சகதியமாக மாறி பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது பருவமழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போதும் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்கப்படாததால் பஸ்கள் உள்ளே வந்து செல்லும்போது எழும் துாசு படலம் பயணிகளை சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. மேலும், இதனை சுவாசிக்கும் பயணிகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.பயணிகள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டில் பஸ் வந்து செல்லும் வளாகத்தின் தரைத்தளம் சீரமைக்கவில்லை. இதனால், மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியமாக காட்சி தரும்.தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வாகனங்கள் வந்து செல்லும்போது எழும் துாசு படலத்தால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாண்ட் தரைதளத்தை சீரமைக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
01-Nov-2024