உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை தாக்கி ஆதிவாசி பலி

யானை தாக்கி ஆதிவாசி பலி

கோத்தகிரி : கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஆதிவாசி பலியானார். நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்தில் பங்களபடிகை ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(28) என்பவர் நேற்று முன்தினம் கரிக்கையூரில் இருந்து பங்களபடிகை கிராமத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, சாலையோரத்தில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவக்குமாருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று உதவி வனப்பாதுகாவலர் ஜெயராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, உடனடி நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை