உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புத்தக வாசிப்பை மேம்படுத்த மலர் நாற்றுகள் வழங்கல்

புத்தக வாசிப்பை மேம்படுத்த மலர் நாற்றுகள் வழங்கல்

கோத்தகிரி; கோத்தகிரி நுாலக வாசகர் வட்டம் சார்பில், மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு மலர் நாற்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கோத்தகிரி நுாலகத்தில் வாசகர் வட்டம் சார்பில், சமூக ஆர்வலர் நிர்மலாவின் பிறந்தநாளை ஒட்டி, பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.'இந்த மரக்கன்றுகளை, மாணவர்கள் நுாலக வளாகத்தில் நடவு செய்து,பராமரித்து பாதுகாப்பவர்களுக்கு, ஊக்க பரிசுகள் வழங்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டது.இதனால், மாணவர்கள் நுாலகத்திற்கு அடிக்கடி வருவதற்கு வழி வகுப்பதுடன், மாணவர்களின் வாசிப்பு பழக்கமும் மேம்படும். மேலும், 'நீலகிரி இயற்கை வளத்தை பாதுகாக்க, பொது மக்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் அனைவரும், ஒரு மரமாவது நடவு செய்ய வேண்டும்,' என, நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்தனர். இதில், நுாலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ