மதுவின் தீமைகள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் படுகர் கலாச்சார பாதுகாப்பு இயக்கம் சார்பில், மதுவின் தீமைகள் குறித்து, துண்டு பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.படுகர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் வினியோகிக்கப்படும் துண்டு பிரசுரத்தில், 'படுகர் பாரம்பரிய உடை அணிவதை கடுமையாக கொள்வதுடன், குழந்தைகளுக்கு கலாசாரத்தை கட்டாயம் கற்றுத் தருவது; கிராமங்களில் வளர்ந்து வரும் மதமாற்றத்தை தடுப்பது; பண்டிகைகள், திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில், மது வழங்குவதை கட்டாயம் தவிர்ப்பது; பண்டிகைகளை, மது இல்லாமல், எளிமையாக சிறப்பாக நடத்துவது; கிராம வளர்ச்சிக்கு இளைஞர்களை ஒருங்கிணைப்பது, பொருளாதார முன்னேற்றத்திற்காக,மாற்று வழிகளை ஆராய்ந்து செயல்படுவது; பழங்குடியினர் பட்டியலில் சேர ஒருங்கிணைந்து செயல்படுவது,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.படுகர் கலாசார பாதுகாப்பு இயக்கத்தின் இந்த முயற்சியை, வரவேற்றுள்ள இளைஞர்கள் உட்பட பலர், இயக்கத்தில் இணைந்து, சமுதாயத்தை பாதுகாக்க உறுதி ஏற்று வருகின்றனர்.