உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் மாவட்ட ஹாக்கி போட்டி துவக்கம்

குன்னுாரில் மாவட்ட ஹாக்கி போட்டி துவக்கம்

குன்னுார்; குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான, ஹாக்கி போட்டிகள் துவங்கியது.'ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ்; ஊட்டி கிரசன்ட் கேஸ்டல் பள்ளி' சார்பில் நேற்று துவங்கிய போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த போட்டிகள் வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.'லீக் மற்றும் நாக்அவுட்' முறையில் நடக்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்த கிருஷ்ணன், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா, கிரசன்ட் கேஸ்டல் பள்ளி தாளாளர் உமர் பாரூக் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை