உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்ட ஹாக்கி போட்டி: ஊட்டி, குன்னுார் பள்ளிகள் வெற்றி

மாவட்ட ஹாக்கி போட்டி: ஊட்டி, குன்னுார் பள்ளிகள் வெற்றி

குன்னுார்; குன்னுாரில் நடந்த, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், கிரசன்ட் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு பள்ளி ஆகியவை வெற்றி பெற்றன. நீலகிரி மாவட்ட அளவிலான, ஹாக்கி போட்டிகள், கடந்த, 27ம் தேதியில் இருந்து, 4 நாட்கள் நடந்தன. 'லீக் மற்றும் நாக்அவுட் முறையில், 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோர்,' என, 3 பிரிவுகளில் நடந்தது. இறுதி போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோரில், 3-2 என்ற கோல் கணக்கிலும்; 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 5 -2 என்ற கோல் கணக்கிலும் கிரசன்ட் பள்ளி, பிருந்தாவன் பள்ளியை வென்றது. 19 வயதுக்கு உட்படடோரில் புள்ளிகள் கணக்கில், அறிஞர் அண்ணா அரசு பள்ளி, பிருந்தாவன் பள்ளியை வென்றது.பரிசளிப்பு விழாவில், 'ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ்' அமைப்பு துணை தலைவர் சுரேஷ்குமார், கிரசன்ட் பள்ளி முதல்வர் ஆல்ட்ரிச், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு கிரசன்ட் பள்ளி ஸ்போர்ட்ஸ் செயலாளர் பீனா, பிருந்தாவன் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மலர்விழி, நிஷா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.ஹாக்கி அமைப்பு சார்பில், 20 பேருக்கு காலணிகள் வழங்கப்பட்டது. பொருளாளர் ராஜா தொகுத்து வழங்கினார். நடுவர்களாக தேசிய நடுவர் சலாம், நெல்சன், பிரவீன், கிறிஸ்டோபர், மணிகண்டன், கிரி, ரவி பணியாற்றினர்.ஏற்பாடுகளை, கிரசன்ட் பள்ளி தாளாளர் உமர் பாரூக், உடற்கல்வி ஆசிரியர் கோபிநாத், ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரிஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை