உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாவட்ட அளவிலான செஸ் போட்டி; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பந்தலூர்: நீலகிரி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊட்டி -குன்னூர் சாலை யில் உள்ள புனித தாமஸ் பள்ளியில் நடந்த போட்டியில், பந்தலூர் அருகே எருமாடு பகுதியில், லாக்ஸ் மேக்ஸ் பிளே சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மாற்றுத்திறனாளி பயிற்சியாளரான அன்பரசி, மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கி, போட்டியில் பங்கேற்க செய்தார். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில், பெஷியாசிமியோன் முதலிடம், பீபா சிமியோன் 2-ம் இடம்,கிரித்திகாஷூ 3-ம் இடம்,ஷிபானி சங்கர் 4-ம் இடத்தையும் பிடித்தனர். பொது பெண்கள் பிரிவில் நிவேதிதா முதல் இடத்தையும், அன்பரசி 2- ம் இடத்தையும் ராஜாகீர்த்தனா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இரண்டு ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என, மொத்தம் 9-பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அகாடமி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அகாடமி அலுவலகத்தில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ