உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தி.மு.க., கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோத்தகிரி: கோத்தகிரியில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், மத்திய பட்ஜெட்டை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், நகர செய லாளர் காளிதாஸ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சின்ன பாபு, கமலா சீராளன் ஆகி யோர் முன்னிலை வசித்தனர். மாவட்ட செயலாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை; ஜி.எஸ்.டி., தொகையை விடுவிக்கவில்லை எனக்கூறி, கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதேபோல, கீழ் கோத்தகிரி ஒன்றியம் சார்பில், செயலாளர் பீமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை