உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு: தி.மு.க., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு: தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஊட்டி: மத்திய அரசின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து, ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் ராஜூ தலைமையில், எஸ்.ஐ.ஆர்., என்னும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராவும், தேர்தல் கமிஷன் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட அவை தலைவர் போஜன், தி.மு.க., உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். திரளான தி.மு.க., கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை