/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் மூன்று நாட்கள் மூடப்பட்ட தொட்டபெட்டா சிகரம் மீண்டும் திறப்பு
ஊட்டியில் மூன்று நாட்கள் மூடப்பட்ட தொட்டபெட்டா சிகரம் மீண்டும் திறப்பு
ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா சிகரம், யானை நடமாட்டம் காரணமாக, மூன்று நாட்கள் மூடப்பட்ட நிலையில், நேற்று திறக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாக தொட்டபெட்டா சிகரம் உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தொட்டபெட்டா சிகரத்தில் காண தவறுவதில்லை.இந்நிலையில், தொட்ட பெட்டா காட்சி முனை அருகே, 5ம் தேதி யானை வந்ததை அடுத்து, வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டியதுடன், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர்.இதனால், தொட்டபெட்டா சிகரம், 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை மூடப்பட்டது. வனத் துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வந்த வழியாகவே, யானை குன்னுார் நோக்கி இறங்கி திரும்பி சென்றதை அடுத்து, நேற்று பகல், 11:00 மணி முதல் தொட்டபெட்டா சிகரம், மீண்டும் திறக்கப்பட்டது.