உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துார் வராத தடுப்பணை

துார் வராத தடுப்பணை

கோத்தகிரி: ஊட்டி–கோத்தகிரி சாலையில் வன விலங்குகளுக்காக கட்டப்பட்ட தடுப்பணை துார் வாராமல் உள்ளதால், விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஊட்டி– கோத்தகிரி சாலையில், வன விலங்குகள் தண்ணீர் பருக ஏதுவாக, சாலையோரத்தில் பல இடங்களில் வனத்துறை சார்பில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தடுப்பணை துார் வாரப்படாமல் உள்ளதால், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வறட்சி நாட்களில் தண்ணீரை சேமிக்க முடியாமல், வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தடுப்பணையை துார்வாரி, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ