உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊராட்சி நடுநிலை பள்ளி குழந்தைகளுக்கு டிரேக் ஷூட்

ஊராட்சி நடுநிலை பள்ளி குழந்தைகளுக்கு டிரேக் ஷூட்

கோத்தகிரி ;நீலகிரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கோத்தகிரி வட்டார வள மையம் கண்காணிப்பில் இயங்கி வரும் இம்மையம், 20 குழந்தைகளுடன் இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு, கல்வியுடன், உணவு மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.மைய குழந்தைகளுக்கு, அஜ்ஜூர் பகுதியை சேர்ந்த, தொழிலதிபர் ராமலிங்கம், 'டிரேக் ஷூட்' வழங்கினார். நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், மருத்துவர் திவ்யா, சிறப்பு ஆசிரியர்கள் மீனா, வானவில் மன்ற கருத்தாளர் ராகவேந்தர், மைய பொறுப்பாளர் பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். சிறப்பு பயிற்றுனர் மங்கள வல்லி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி