உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடைக்கு முன்பாக வறட்சி விலங்குகளுக்கு குடிநீர் வினியோகம்

கோடைக்கு முன்பாக வறட்சி விலங்குகளுக்கு குடிநீர் வினியோகம்

கூடலுார்: மசினகுடியில் கோடைக்கு முன்பாக வறட்சி ஏற்பட்டுள்ளதால், விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வாகனத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடியில் கோடைவறட்சியின் போது, வன விலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வன துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, வனப்பகுதிகளில் உள்ள சிமென்ட் தொட்டிகளில் ஊற்றுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், நீர்நிலைகளில் வரத்து குறைந்து வருகிறது. இதை தொடர்ந்து, வறட்சி அதிகரித்துள்ள, மசினகுடி சீகூர் வனப்பகுதியில் வனத்துறை வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, தொட்டிகளில் ஊற்றி விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை