உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தட்டுப்பாடு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம்

தட்டுப்பாடு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம்

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், நெல்லியாளம் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 80 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஆனால், மழை காலங்களில் மட்டுமே கிணறுகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலம் துவங்கினால், கிணறுகளில் தண்ணீர் குறைந்து வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால், நகராட்சி குடிநீர் வாகனம் மூலம், அதிகம் தண்ணீர் உள்ள தடுப்பணைகள் மற்றும் ஒரு சில கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதி மக்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'கோடை காலங்களிலும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், நகராட்சி நிர்வாகம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால், இதுபோன்ற தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், தண்ணீர் லாரி வரும் நாட்களில் வேலைக்கு செல்லாமல் தண்ணீருக்கு காத்திருக்கும் நிலையும் மாறும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை