உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் உலவும் கால்நடைகள் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

சாலையில் உலவும் கால்நடைகள் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

கூடலுார்: கூடலூர், தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலூர், தமிழக, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இப்பகுதி சாலையை உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில வாகனங்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பீக் ஹவர் நேரத்தில் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில், நகரில் உலா வரும் கால்நடைகளால் வாகனங்கள் இயக்கவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க, அரசுத் துறையினர் நடவடிக்கை எடுக்கததால், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், 'கூடலூர் நகர சாலையில், மூன்று மாநில வாகனங்களும் அதிக அளவில் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் நகரில் உலா வரும் கால்நடைகள், வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்லவும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே நகரில் கால்நடைகள் உலா வருவதை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி