உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பகலில் மேகமூட்டம்: சிரமப்பட்ட ஓட்டுநர்கள்

பகலில் மேகமூட்டம்: சிரமப்பட்ட ஓட்டுநர்கள்

கூடலுார்: கூடலுாரில், மழையுடன் மேகம் மூட்டம் ஏற்பட்டதால் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க சிரமப்பட்டனர். நீலகிரி மாவட்டம, கூடலுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மிதமான மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, காலை மழையுடன், மேகமூட்டம் ஏற்பட்டது. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு சென்று வரவும், வாகனங்கள் இயக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள், முகப்பு விளக்கை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினர். அதிகாரிகள் கூறுகையில், 'மழையின்போது, காலநிலை மாற்றம், மேகமூட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனால், ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ