உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி!

 புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி!

கூடலூர்: -கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் முட்புதர்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். கூடலூர் ---- தொரப்பள்ளி வரையிலான, 6 கி.மீ., சாலையோரங்களில் பல இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டுள்ள 'அடையாள அறிவிப்பு பலகைகள்' வெளியே தெரியாத அளவுக்கு முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் புதர்களை அகற்ற வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், 'ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் முட்புதர்கள் அகற்றி வருகிறோம். இதன், தொடர்ச்சியாக மைசூரு சாலையிலும் முட்புதர்கள் அகற்றப்படும்.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை