உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

 போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். போலீசார் பங்கேற்று போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும், போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வாலிபால் மற்றும் எறிபந்து போட்டிகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !