அதிகாலையில் வெளுத்து வாங்கிய மழை: விழுந்த மரங்களை அதற்றிய தீயணைப்பு படையினர்
குன்னுார்: குன்னுாரில் அதிகாலையில் பெய்த மழையால் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர். குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் நேற்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, அப்பர் குன்னுார், சப்ளை டிப்போ பகுதி, காந்திபுரம் ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. சில இடங்களில் மின்கம்பங்கள் மீதும் மரங்கள் சாய்ந்தன. குன்னுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் இறங்கினர். நவீன மர அறுவை இயந்திரங்கள் கொண்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காலை வெயிலான காலநிலை நிலவியது.
-கோடநாட்டில் அதிகபட்சம்
மழையளவு விவரம் (மி.மீ.,)கோடநாடு 72கோத்தகிரி 19குன்னூர் ரூரல் 30குன்னூர் 27.5ஊட்டி - 25.2கெத்தை 23பர்லியார் 23குந்தா 22உலிக்கல் 17அவலாஞ்சி 15கீழ்கோத்தகிரி 15பாலகொலா - 14கேத்தி 14எமரால்டு 12கிண்ணக்கொரை -10எடப்பள்ளி 10கல்லட்டி 6போர்த்தி மந்து 6நடுவட்டம் 4அப்பர்பவானி 4