உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலக்காடு முண்டூர் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி

பாலக்காடு முண்டூர் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முண்டூர் நொச்சுப்புள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோசப், 75. இவர், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். குளத்தில் இறங்கியபோது, தாழ்வான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த, கோங்காடு போலீசார் ஜோசப் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை