உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்

தேர்தல் முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அருணா தலைமை வகித்தார். அதில், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கம்யூட்டர் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளில் சீரற்ற மயமாக்கல் (இ.வி.எம்., மற்றும் வி.வி.பி.ஏ.டி.,) பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் தமிழ்மணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.டி.ஓ.,கள் மகராஜ் (ஊட்டி), சதீஷ் (குன்னுார்), செந்தில் (கூடலுார்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ