உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கன்டோன்மென்ட் வாரியத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கும் வரை தேர்தல் வேண்டும்: ராணுவ அமைச்சக முதன்மை செயலரிடம் வலியுறுத்தல்

கன்டோன்மென்ட் வாரியத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கும் வரை தேர்தல் வேண்டும்: ராணுவ அமைச்சக முதன்மை செயலரிடம் வலியுறுத்தல்

குன்னுார்; 'வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கும் வரை, மக்கள் பிரச்னைகள் தீர்க்க, தேர்தல் நடத்த வேண்டும்,' என, மத்திய ராணுவ அமைச்சக முதன்மை செயலரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ளது. மாநில அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்கு, உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதை போன்று, கன்டோன்மென்ட் வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள, 62 வாரியத்தை அந்தந்த மாநில அரசு உள்ளாட்சிக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 13 வாரியங்கள் பிரிக்கும் பணி துவங்கியது. இந்நிலையில், அனைத்திந்திய கன்டோன்மென்ட் போர்டு முன்னாள் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர் சங்க நிர்வாகிகள் டில்லியில், ராணுவ அமைச்சக முதன்மை செயலர் ராஜேஷ் குமார் சிங்கை நேரில் சந்தித்தனர்.இது குறித்து, சங்க பொதுசெயலாளர் பாரதியார் கூறுகையில், ''கன்டோன்மென்ட் நிர்வாகத்தை மாநகராட்சி அல்லது நகராட்சியுடன் இணைக்க தாமதம் ஏற்படாமல் இருக்க விரைந்து முடிக்க வேண்டும்; மத்திய அரசின் நிர்வாகத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க, அதற்குரிய நிதியை மாநில அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்; அதுவரை ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகளால் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை