உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் யானை: வனத்துறை கண்காணிப்பு

குன்னுாரில் யானை: வனத்துறை கண்காணிப்பு

குன்னுார்; குன்னுார் மலைப்பாதையில் உலா வந்த குள்ள கொம்பன் யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். குன்னுார் -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், 11 காட்டு யானைகள் உலா வந்தன. அதில், குள்ள ஒற்றை கொம்பன் யானை மட்டும் தனியாக பிரிந்து ரன்னிமேடு, நஞ்சப்பாசத்திரம், லாஸ் பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்து வாழை மரங்களை உட்கொண்டதுகடந்த இரண்டு நாட்களாக இந்த யானை சின்ன கரும்பாலம், பெரியார் நகர், கரோலினா வழியாக கரிமரா ஹட்டி, பழத்தோட்டம் பகுதிக்கு சென்றது. அந்த பகுதிகளில் உள்ள வாழை மரங்களை உட்கொண்டது. நேற்று பழத்தோட்டம் பகுதியில் முகாமிட்டிருந்த யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

உணவுக்காக தடம் மாறும் யானைகள்

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில், பலா மரங்கள் உட்பட இயற்கை வளங்கள் அதிகம் உள்ளன. சமீப காலமாக, மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் அனுமதியால், இங்குள்ள ஏராளமான பலா உட்பட அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கு தனியார் இடங்களில் சாலை அமைக்க நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி சாலை அமைத்துள்ளதும், யானை வழித்தட வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாகவே, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் சாலையோர பகுதிகளில் உலா வந்த குள்ள கொம்பன் யானை உட்பட பல யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வர ஆரம்பித்துள்ளது. மலைப்பாதையில் இயற்கை வளங்கள் அழிப்பதை தடுத்து, யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை