உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

கூடலுார், : கூடலுாரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 140 பேர் வேலை வாய்ப்பு உத்தரவு பெற்றனர்.கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வு நடந்தது. அதில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டு வேலை வாய்ப்புக்கான உத்தரவுகளை பெற்றனர். முகாமில் உதவி பேராசிரியர் சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல, தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில், முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தனியார் நிறுவன அதிகாரிகள் ஜெயத்திலகன், லோகேஷ் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வை நடத்தினர். இதில், இறுதி ஆண்டு படித்து வரும் 60 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 20 பேரை தேர்வு செய்து வேலைக்கான உத்தரவுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை