உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி வளாகத்தில் கிடந்த காலி மது பாட்டில்கள்: அதிர்ச்சியில் பெற்றோர் அதிர்ச்சியில் பெற்றோர்

பள்ளி வளாகத்தில் கிடந்த காலி மது பாட்டில்கள்: அதிர்ச்சியில் பெற்றோர் அதிர்ச்சியில் பெற்றோர்

கூடலுார்,; கூடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஊராட்சி பள்ளி வளாகத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, கடந்த, 31ம் தேதி முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், கூடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில், காலி மது பாட்டில்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவைகளை அகற்றினர். தகவல் அறிந்த பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.பெற்றோர் கூறுகையில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், யாரோ சேதமடைந்த சுற்றுச்சுவர் வழியாக பள்ளி வளாகத்தில் நுழைந்து மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை விட்டு சென்றுள்ளனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்க சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை