மேலும் செய்திகள்
பள்ளிவாசலுக்கு சீர்வரிசை
20-Apr-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பள்ளிவாசல் சார்பில் உலக விளையாட்டு ஊடகம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளிவாசல் கமிட்டி செயலாளர் அய்முட்டி வரவேற்றார். பள்ளிவாசல் இமாம் மொய்தீன் சக்காபி தலைமை வகித்து பேசுகையில், ''கடந்த காலங்களில் செய்தி தாள்களில் நாட்டு நடப்புகள் மற்றும் உள்ளூர் தகவல்களை செய்தி வடிவில், படிப்பது என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனால் படிக்கும் மாணவர்கள் மற்றும் வயோதிகர்கள் செய்தித்தாள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பர்.ஆனால், மாறிவரும் கலாசாரத்தால் வாசிப்பு திறன் குறைந்து, மொபைல் போன்களில் அன்றாட செய்திகளை பல்வேறு வகையிலும் தெரிந்து கொள்கின்றனர். இதனால், வாசிப்பு திறனும் குறைந்து, செய்தித்தாள்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.இந்த நிலை மாற படிக்கும் வயதில், செய்தித்தாள்களை படிக்க பள்ளிகளில் ஊக்கப்படுத்துவதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளில் சாதிக்கவும், பொது அறிவு மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்,'' என்றார்.நிகழ்ச்சியில், கிருஷ்ண பாரதியார், சம்சுதீன், மற்றும் பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.பள்ளிவாசல் கமிட்டி தலைவர் மஸ்ஜித்ஹாஜி நன்றி கூறினார்.
20-Apr-2025