மேலும் செய்திகள்
அண்ணாதுரை படத்துக்கு மலரஞ்சலி
04-Feb-2025
கோத்தகிரி; கோத்தகிரி எஸ். கைக்காட்டியில், ஈழுவா-தீயா பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் செந்தாமரை தலைமை வகித்தார். அதில், துணை செயலாளராக திலீப்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக ரவீந்திரன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், 'அடுத்த பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடத்துவது; இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன்; சமுதாய வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது,' என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரமைப்பு நிர்வாகிகள், கோரல் விஸ்வநாதன், ரவீந்திரன், சாத்தப்பன், வேணுகோபால் சிவபாக்கியம் மற்றும் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர். பிரபாகரன் வரவேற்றார். சீனிவாசன் நன்றி கூறினார்.
04-Feb-2025