உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலுார், ; ஏலக்காய் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், கூடலுார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேசிய அளவில் கேரளாவுக்கு அடுத்து, தமிழகம், கர்நாடக விவசாயிகள் அதிகளவில் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேனி, நீலகிரி மாவட்டம் கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தனியார் எஸ்டேட்டுகளை தவிர சிறு விவசாயிகளும் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். ஏலக்காய் அறுவடை துவங்கி உள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை, 3,300 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு விளைச்சல் குறைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட கொள்முதல் விலை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,' என்றனர். வியாபாரிகள் கூறுகையில்,'உற்பத்தி பாதிப்பாலும், ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ