மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது
குன்னுார்; கோத்தகிரி அருகே, மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, 40 வயதான ஒருவர், தனியார் தேயிலை தொழிற்சாலை மேற்பார்வையாளராக உள்ளார். மது பழக்கம் உள்ளது. இவரது, 15 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மகளின் உடல் நிலை பாதித்ததால், ஊட்டி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்தது. அதில், மாணவியின் தந்தை, மகளை பாலியல் பலாத்காரம் செய்ததும், அவர், 4 மாத கர்ப்பமாக உள்ளார் என்பதும் தெரிய வந்தது. குன்னுார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.