உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கன்று குட்டியை தாக்கி கொன்ற புலியால் அச்சம்

கன்று குட்டியை தாக்கி கொன்ற புலியால் அச்சம்

கூடலுார்; கூ டலுார் தேவர் சோலை, சர்க்கார் மூலப்பகுதியில் உலா வரும் புலி கடந்த வாரம், கணியம்வயல் பகுதியில் அசைனார் என்பவரின், இரண்டு எருமை கன்று குட்டிகளையும், சில நாட்களுக்கு முன் நாராயணன் என்பவரின் பசு மாட்டையும் கொன்றது. அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இரவு சமீர் என்பவரின் கன்று குட்டியை புலி தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பசுந்தேயிலை பறிக்கும் பணிக்குச் சென்ற, தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மக்கள் கூறுகையில், ' இப்பகுதியில் தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் புலி, மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில் இதுவரை மாமிச உண்ணி நடமாட்டம் குறித்து, அங்கு வைக்கப்பட்ட கேமராவில் ஏதும் பதிவாகவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் விலங்குகளை கண்டால் தகவல் தர வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ