வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி
ஊட்டி; ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் தீயணைப்பு துறை ஊழியர்கள் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியில், 'தீ விபத்து ஏற்படும் சமயங்களில் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்; விபத்து ஏற்பட்ட வாகனங்களில் இருப்பவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது,' குறித்து அங்கு வந்த வாகன ஓட்டுனர்களிடம் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன ஓட்டுனர்கள் தீயணைப்பு ஏற்படும் சமயங்களில் எவ்வாறு கையாள்வது குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.