உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீயணைப்பு வீரர்கள் வீர வணக்கம்

தீயணைப்பு வீரர்கள் வீர வணக்கம்

குன்னுார், ; குன்னுார் தீயணைப்பு துறையில், உயிர்நீத்தோர் தினத்தையொட்டி, வீர வணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது.மும்பை துறைமுகத்தில், 1944 ஏப்., 14ல் விக்டோரியா கப்பலில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்ற, 33 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இவர்கள் நினைவாக, ஆண்டுதோறும் உயிர் நீத்தோர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி, குன்னுார் தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில், நடந்த நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த, 33 வீரர்களுக்கு, நிலைய அலுவலர் குமார், அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள் வீர வணக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ