ஊட்டி அருகே வனப்பகுதியில் கற்களை உடைத்த ஐவர் கைது
ஊட்டி; ஊட்டி அருகே, வனப்பகுதியில் கற்களை உடைத்த சம்பவத்தில், ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகம் ஆரம்பி பிரிவு, வென்லாக் டவுன் காப்புக்காடு பகுதியில், நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்து கற்களை உடைத்தாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து, அங்கு இருந்தவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், வெங்கடேஷ், 43, நாகராஜ், 32, சந்தோஷ்,31, ஈஸ்வரன்,34 மற்றும் சுரேஷ்,49, ஆகியோர் மண்ணை அகற்றி, கற்களை உடைத்தது உறுதி செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.