உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் கார் விபத்து உயிர் தப்பிய ஐந்து பேர்

கூடலுாரில் கார் விபத்து உயிர் தப்பிய ஐந்து பேர்

கூடலுார், : கூடலுார் தேவர்சோலை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், காரில் நேற்று முன்தினம், இரவு, தேவர்சோலை சாலை வழியாக, கூடலுார் நோக்கி வந்தனர். இரவு, 9:45 மணிக்கு இரண்டாவது மைல் பகுதியை கடந்து, கூடலுார் நோக்கி வரும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், காரில் பயணித்த வயநாட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ