உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்; இரவில் உறக்கம் தொலைத்த மக்கள்

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்; இரவில் உறக்கம் தொலைத்த மக்கள்

குன்னுார் : குன்னுாரில் பெய்த கனமழையால், எல்.ஜி., குடியிருப்பு, மாடல்ஹவுஸ் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.குன்னுாரில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாடல் ஹவுஸ்,எல்.ஜி., குவாட்டர்ஸ் பகுதிகளில் அன்பரசு, சாந்தி, வினிதா ஆகியோரின் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.சுற்றுப்புற பகுதியில் குடியிருப்பு வளாக பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், இரவு நேரத்தில், உறக்கம் இல்லாமல், தண்ணீர் வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.சமீப காலமாக இந்த பகுதியில் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்தும், கட்டடங்கள் கட்டியும் உள்ளதால் நீர் வழித்தடங்கள் மாறி குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை