மேலும் செய்திகள்
மூதாட்டியை தாக்கி நகை பறித்த திருடன்
18-Oct-2024
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில், வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவில் விஷம் கலந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பந்தலுார் அருகே சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது வீட்டில் உணவு சமைத்து வைத்துள்ளனர். இவர் வெளியே சென்று விட்டு பகல், 11:00 மணிக்கு வந்து உட்கொள்ள முற்பட்டபோது, சாம்பாரில் பூச்சி மருந்து வாசனை வந்த நிலையில், அதில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. அவரது மனைவி தீபா பணிக்கு செல்லும் போது, உணவு எடுத்து சென்று இருந்த நிலையில், அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் விஷ மருந்து காலி டப்பா மற்றும் ஒரு மிரட்டல் கடிதம் இருந்துள்ளது. இவற்றுடன், சிவமூர்த்தி சேரம்பாடி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் (பொ) செல்வகுமாரி கூறுகையில், ''புகார் குறித்து இதுவரை எனக்கு தகவல் வரவில்லை. இருப்பினும் சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்டு உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
18-Oct-2024