மேலும் செய்திகள்
ஆட்ட நாயகி வேதா கிருஷ்ணமூர்த்தி
12-May-2025
கோத்தகிரி; கோத்தகிரி அருகே மடித்தொரை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவன், இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பில், ஆறு மாதம் பயிற்சி பெற தேர்வாகி உள்ளார்.கோத்தகிரி மடித்தொரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணக்குமார் - உமா மகேஷ்வரி ஆகியோரின் மகன் பவிஷ் குமார்,15. பள்ளி மாணவரான இவர், கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதில், சிறு வயதில் இருந்தே அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் திறம்பட செயல்பட்ட இவரை, கர்நாடக மாநிலம், 'சிக் ஸ்டார் கால்பந்து அகாடமி' அணி, மூன்று ஆண்டுகளுக்கு முன், தங்களது அணிக்காக தேர்வு செய்தது. அங்கு, பவிஷ்குமார் விளையாடி கொண்டு, படித்து கால்பந்து பயிற்சி பெற்று, பல்வேறு அணிக்காக விளையாடி வருகிறார்.பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள பவிஷ்குமார், கடந்த சில நாட்களுக்கு முன், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, தேசிய அளவிலான கால்பந்து போட்டியில், கர்நாடக மாநில அணிக்கான போட்டியில் விளையாடி முத்திரை பதித்துள்ளார்.இந்நிலையில், தற்போது, இங்கிலாந்து வடக்கு லண்டனில் உள்ள, புகழ் பெற்ற டாட்டிங் ஹாம் கால்பந்து அணி, பவிஷ்குமாரை, ஆறு மாதம் பயிற்சி அளிக்க தேர்வு செய்துள்ளது. வரும்,10ம் தேதி பயிற்சிக்காக இங்கிலாந்து செல்கிறார்.நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு, நீலகிரி கால்பந்து சங்க நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
12-May-2025