உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நடைமேம்பாலம்

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நடைமேம்பாலம்

அண்ணா நகர்: அண்ணா நகரில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதால், இரு வாரங்களில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சாலையில், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலை கடக்கும் வகையில், நகரும் படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்படுகிறது. அண்ணா நகர் மண்டலம், அண்ணா வளைவு அருகில், அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது. அதன்படி, 15.98 கோடி ரூபாய் மதிப்பில், அண்ணா நகர் ஆர்ச் மேம்பாலம் அருகில், கடந்தாண்டு பணிகள் துவங்கின. தற்போது, இருபுறங்களும் நகரும்படிகள், நடைபாலம் உள்ளிட்டவை அமைத்து, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இரு வாரத்தில் பணிகள் முழுதும் நிறைவடைந்து, நடைபாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !