உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டத்தில் இறந்து கிடந்த கரடி வனத்துறையினர் விசாரணை

தோட்டத்தில் இறந்து கிடந்த கரடி வனத்துறையினர் விசாரணை

குன்னூர் : குன்னுார், ஓதனட்டி கிராமத்தில் விவசாய தோட்டத்தில், இறந்து கிடந்த கரடி தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.குன்னுார் ஜெகதளா அருகே, ஓதனட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் தேயிலை தோட்டத்தில் கரடி இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதன் பேரில், நீலகிரி கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மணிமாறன் தலைமையில், முதுமலை புலிகள் காப்பக வனகால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் ஜெகதளா உதவி கால்நடை மருத்துவர் விக்னேஷ், கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் உட்பட வனத்துறையினர் உடற்கூறாய்வு பரிசோதனை செய்து, மாதிரிகள் சேகரித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் கரடிக்கு 10 வயது இருக்கும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மற்ற விபரங்கள் தெரிய வரும், விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை