உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டிற்குள் பாம்பு மீட்ட வனத்துறை

வீட்டிற்குள் பாம்பு மீட்ட வனத்துறை

பந்தலுார் : பந்தலுார் அருகே செட்டிவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று வந்துள்ளது.இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து வீட்டிற்குள் பதுங்கிய கட்டு விரியன் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். வனத்துறையினர் கூறுகையில்,'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், வனப்பகுதிகளும் காட்டு தீயில் கருகி வருவதால் பாம்புகள், குளிர்ச்சியான இடங்களை நோக்கி வரும்.எனவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் பாம்புகள் புகுந்தால் தகவல் தெரிவித்து அதன் மீட்க உதவ வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை