காயத்துடன் காட்டெருமை வனத்துறையினர் சிகிச்சை
குன்னுார்; குன்னுார் காட்டேரி அணை அருகே உடலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று சுற்றி திரிந்தது. தகவலின் பேரில், குந்தா வனச்சரகர் செல்வக்குமார் தலைமையில், ஜெகதளா கால்நடை டாக்டர் விக்னேஷ், வனத்துறையினர், நீண்ட நேரம் கண்காணித்து, செடி மறைவில் வரும்போது, மருந்து தெளித்து சிகிச்சை அளித்தனர். வனத்துறையினர் கூறுகையில்,'இரு காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுள்ளதால் காட்டருமையின் வலது கால் தோள்பட்டை, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. மருந்து தெளித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,'என்றனர்.