உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இரவில் ஏற்பட்ட காட்டுத்தீ வனப்பகுதி எரிந்து பாதிப்பு

 இரவில் ஏற்பட்ட காட்டுத்தீ வனப்பகுதி எரிந்து பாதிப்பு

பந்தலுார்: பந்தலுார் பஜார் அருகே, தனியார் எஸ்டேட் வனப்பகுதியில், இரவில் ஏற்பட்ட காட்டு தீயில், வனப்பகுதி எரிந்து சேதமானது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பஜார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கேரள மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி, தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. வனத்துக்கு மேல் பகுதியிலும், சாலையின் கீழ் பகுதியிலும் அதிகளவு குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு நேற்று முன்தினம் இரவு தீ பரவியது. வனத்துறையினர் தீயை அணைக்க முயன்றாலும், தீயின் வேகத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கூடலுார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, மூன்று மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பத்து ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை