உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் நான்கு வீடுகள் சேதம்

மழையால் நான்கு வீடுகள் சேதம்

கோத்தகிரி; நீலகிரியில் கடந்த சில நாட்களாக, வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையில் நேற்று முன்தினம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் மழை பெய்தது. இதில், ஏற்கனவே ஈரம் கண்டிருந்த கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், இரு இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.மேலும், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் காலனியில் மூன்று வீடுகள், நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்துாரிபாய் நகர் பகுதியில், ஒரு வீடு சேதம் அடைந்தது. நேற்று பகல் மழை ஓய்ந்த நிலையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ