மேலும் செய்திகள்
லாஸ்பேட்டையில் மருத்துவ முகாம்
17-Feb-2025
கூடலுார் ; மசினகுடி வாழை தோட்டத்தில் நடந்த, இலவச மருத்துவ முகாமில், 83 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.மசினகுடி, வாழை தோட்டம் சமுதாய கூடத்தில், வனத்துறை மற்றும் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமில், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் டால்ப் ஸ்டாப், ரவிசங்கர், ராமகிருஷ்ணன் உட்பட ஒன்பது டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அதில், ரத்த கொதிப்பு, உடல் எடை, சர்க்கரை வியாதி, தோல் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. முகாமில், 83 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.
17-Feb-2025